ஹோம் /திருச்சி /

வேளாண் பொருட்கள் சாகுபடிகளுக்கு மானியம்-விவசாயிகள் விண்ணப்பிக்கும் முறைகள்

வேளாண் பொருட்கள் சாகுபடிகளுக்கு மானியம்-விவசாயிகள் விண்ணப்பிக்கும் முறைகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தோட்டக்கலைத்துறையின் சார்பில் விவசாயிகள் ஏராளமான இடு பொருட்களுக்கு மானியங்களைப் பெற முடியும். அதற்கு இணையம் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகள் ஏராளமான இடு பொருட்களுக்கு மானியம் பெற முடியும். இதை எவ்வாறு பெற முடியும். அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.

  குளித்தலை தோட்டக்கலை உதவி இயக்குனர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தோட்டக்கலைத்துறை சார்ந்த அனைத்து திட்டங்களும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மணத்தட்டை, பொய்யாமணி, சூரியனுார் கிராமங்களுக்கு 80 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

  2022-23ம் ஆண்டில் குளித்தலை வட்டாரத்தில் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 6,120 ரூபாய், கொய்யா சாகுபடிக்கு 9,201 ரூபாய், சப்போட்டா சாகுபடிக்கு, 10,896 ரூபாய், நடவு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

  வீரிய ஒட்டு தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானிய விலையில், 20,000 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வெண்டை விதை மற்றும் இடுபொருட்கள், 10,000 ரூபாய்க்கும், மலர் செடிகள் சாகுபடி செய்ய 10,000 ரூபாயும், நடவு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

  வாழையில் ஊடுபயிராக, காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய்; வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

  இணைய வழியில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி மானியம் வழங்கப்படும். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத விவசாயிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  குளித்தலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வரும், 2022-23 நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற https://tnhoriculture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  எனவே, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்களை பெற்று விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Trichy