முகப்பு /திருச்சி /

திருச்சி சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

X
சமயபுரம்

சமயபுரம் மாரியம்மன் தேர் திருவிழா

Samayapuram mariyamman car festival | பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு அனுதினமும் உற்சவ அம்மன் சிம்ம வாகனம் பூத வாகனம் அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி.. பராசக்தி என விண்ணதிரும் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வருகை தந்து மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Car Festival, Local News, Trichy