ஹோம் /திருச்சி /

திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை வரை  எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு.!

திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை வரை  எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு.!

திருச்சி

திருச்சி

Express train extension to Sengottai via Trichy, Madurai | அடுத்த மாதம் 24ம் தேதி முதல் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

அடுத்த மாதம் 24ம் தேதி முதல் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக திண்டுக்கல் வரை வண்டி எண் 16847-16848 என்ற எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் திருச்சி, மதுரை வழியாக இயக்க நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என்று திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது, இந்த அறிவிப்பு வெளியாகி ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

செங்கோட்டை அதன்படி வண்டி எண் 16847 (எக்ஸ்பிரஸ் ரயில்) மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, பூத லூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன் கோவில் சாண்டி, கடையநல்லூர், தென்காசி, வழியாக சென்று செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றைடையும்.

இதில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைந்து செல்லும். இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடையும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ரயில் சேவை தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy