திருச்சியில் பல நூற்றாண்டு கடந்து இன்றளவும் அசைக்கமுடியாத நிலையில் கம்பீரமாக இருக்கும் கோட்டை நுழைவு வாயில்.
ஆங்கிலேயப் படைத் தளபதிகளான லாரன்ஸ் மற்றும் ராபர்ட்ஓம் எழுதிய குறிப்புகளும் வரைபடமும்தான் கோட்டையைப் பற்றி நமக்குக் கிடைக்கும் தரவுகளாகும். 1753 ஆம் ஆண்டு நவம்பர் 23-ல் அவர் எழுதிய குறிப்பில் - இரண்டு கோட்டைகள் இருந்ததாகவும்; 6000 அடி நீளமும் 36 அடி அகலமும் கொண்ட மிகப் பலம் வாய்ந்ததாக அவை இருந்தன. வெளிக்கோட்டை சுமார் 18 அடி உயரமும் 5 அடி அகலமும் உள்கோட்டை 30 அடி உயரமும் 20 அடி அகலமும் உள்ளதாக இருந்துள்ளன. வெளிக்கோட்டைக்கும் உள்கோட்டைக்கும் இடையே 25 அடி அகலப்பாதை இருந்திருக்கிறது.
மேலும் வெளிக்கோட்டைக்கு வெளியே கோட்டையைச் சுற்றிப் பெரிய அகழி இருந்துள்ளது. அகழி, 30 அடி அகலமும் 12 அடி ஆழமும் உள்ளதாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த இக்கோட்டையானது திருச்சி மாநகரத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
மதுரை நாயக்கர் அரசு உருவாக்க காரணமாக இருந்த மன்னர் விஸ்வநாத நாயக்கர் (1530-1564) காலத்தில் திருச்சியின் நகரத்தை சுற்றியும் கற்களால் ஆன ஒரு கோட்டை கட்டபட்டது.இது 16 கிலோமீட்டர் சுற்றளவில் அகழியுடன் அமைக்கபட்டிருந்தது. பின்பு (18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கு இடையில் அடிக்கடி நடைபெற்ற கர்நாடகப் போர்களில் இது முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இருப்பினும், *மெயின்காட் கேட்* என்று அழைக்கபடும் இக்கோட்டையின் மேற்கு புறத்தில் இருந்த வலைவான பிரதான நுழைவாயிலும் அதனுடன் ஒட்டிய சிறு கட்டிடப் பகுதிகளும் ( உயரம் 8.8 மீ , மற்றும் நீளம் 60 மீ), மட்டும் தற்போது எஞ்சியுள்ளது.
தற்போது உள்ள கீழப்பொலிவார்டு சாலை மேலபொலிவார்டு சாலை பட்டர்வொர்த் ரோடு பகுதிகளில் கோட்டைச் சுவர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இடிக்காமல் விட்டுவைத்துள்ள கோட்டையின் பகுதியே மெயின்கார்டு கேட்டாகும்.
மேலும் இக்கோட்டையே நகர வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக நினைத்த முனிசிபாலிடி 1868இல் இடிக்கத் தொடங்கியது. கோட்டையைத் தரைமட்டமாக்க 12 வருடங்கள் ஆகி 1880இல்தான் முடிந்தது. கோட்டை இடிபாடுகளை அகழியில் போட்டு அதன் மேல் சாலைகள் அமைக்கப்பட்டன. மரங்கள் நிறைந்த அகலமான சாலை என்னும் பொருளில் பொலிவார்டு என்று அவை அழைக்கப்பட்டன. அதோடு பட்டர்வொர்த் என்ற கலெக்டரின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டது.
மன்னர்கள் காலத்தில் பல்வேறு கட்ட போர்களை கண்ட இந்த கோட்டியானது நாளடைவில் சிதலமடைந்து வருகிறது. கோட்டை சுவரை சுற்றியும் கடைகள், ஆக்கிரமிப்புகள் என அமைந்துள்ளது. நமது வலாற்றில் மிக முக்கியமான சின்னமாக திருச்சியில் மெயின்காட் கேட் திகழந்து வருகிறது. ஆனால இன்றை காலகட்டத்தில் இந்த கோட்டியின் சிறப்பும், வரலாறும், பெரும்பாலன மக்களுக்கு தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் மாநில அரசு நமது வரலாற்றை வருங்காலம் சங்கதிகள் தெளிவாக தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு புரனமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் -
என்.
மணிகண்டன்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.