Home /trichy /

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் மலைக்கோட்டை நுழைவு வாயில்... இரவிலும் செஃல்பி எடுக்க பிரியப்படும் திருச்சியன்ஸ்..

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் மலைக்கோட்டை நுழைவு வாயில்... இரவிலும் செஃல்பி எடுக்க பிரியப்படும் திருச்சியன்ஸ்..

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை

Trichy Malaikottai : இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை நுழைவு வாயில் மூவர்ண கொடி வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
திருச்சியில் பல நூற்றாண்டு கடந்து இன்றளவும் அசைக்கமுடியாத நிலையில் கம்பீரமாக இருக்கும் மலைக்கோட்டை நுழைவு வாயிலானது, 75வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டின் தேசியக்கொடி நிறங்களில் ஜொலிக்கிறது.

மேலும் நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த 150 நினைவுச் சின்னங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை ஏற்பாடு செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை நுழைவாயில் பகுதியில் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடியின் நிறங்களில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

மலைக்கோட்டை நுழைவு வாயில்...


இந்த கோட்டை முன்பு தேசியக்கொடி வண்ணங்களிலான மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளதை பார்த்து பூரிப்படைந்துள்ள, திருச்சி மக்கள், இரவு நேரங்களில் இதன் முன்பு நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

மலைக்கோட்டை நுழைவு வாயில்...


மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோட்டை முகப்பிலும் தலா 15 மீட்டர் உயரத்தில் தேசியக்கொடி பறக்க விடுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Independence day, Local News, Trichy

அடுத்த செய்தி