பெட்ரோல் டீசல் விலை உயர்வு விலை உயர்வு காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மின்சார வாகனங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இதனால் திருச்சி ரயில் நிலையம் அருகே மின்சார வாகனங்கள் வாடகைக்கு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டம் தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் 12 மணி நேரத்திற்கு 500 ,24 மணி நேரத்திற்கு 700 என்கிற அடிப்படையில் மின்சாரம் வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.
மின்சார மோட்டார்கள் இயங்கும் போது எந்த சத்தம் மற்றும் அதிர்வுகளை உருவாக்கவில்லை. எனவே, வாகனம் ஓட்டும் போது அனுபவம் இயந்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது,
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தினசரி வேலைக்கு செல்பவர்கள் ஏராளமானவர் வந்து செல்கின்றனர் .
இந்நிலையில் வேலைக்கு செல்பவர்கள் பல நபர்கள் இ பைக் உபயோகப்படுத்தி வருகின்றனர். மேலும் ஸ்விகி, zomato உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களும் தினசரி இந்த பைக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Local News, Rent, Trichy