திருச்சி மாவட்டம் லால்குடி மகிழம்பாடி கிராமத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் குமுளூர் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சிக்கு தோட்டக்கலை இணை பேராசிரியர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டத்திற்கு ஏற்ற தரமான, அதிக விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நெல் ரகங்கள் தேர்வு மற்றும் விதை தொழில்நுட்பங்களைப் பற்றியும், நெற்பயிர் நுண்ணுயிர் பயன்பாடு பற்றியும், நெற்பயிரில் பயிர் மேலாண்மை மற்றும் சொட்டு நீர் பாசன தொழில்நுட்பங்களை பற்றியும் எடுத்து கூறப்பட்டது.
இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் சொட்டு நீர் பாசனத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் பங்கேற்க திருச்சி பகுதி விவசாயிகள் மற்றும் சொட்டு நீர் பாசனத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண் 9597691352, 7397671849 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read :நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?
மேலும், பயிற்சி நடைபெறும் தேதி மற்றும் இடம் உள்ளிட்ட விவரங்கள், பதிவு செய்யும் விவசாயிகளின் செல்போன் எண்கள் மூலம் தெரிவிக்கப்படும் என்றும், இதில் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Local News, Trichy