ஹோம் /திருச்சி /

திருச்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு

திருச்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு

குடிநீர்

குடிநீர்

Trichy District | திருச்சியில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால், ஞாயிற்றுகிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் 13ஆம் தேதி ஞாயிற்று கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் பற்றிய விவரத்தை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரைமட்ட கிணறு நீர் உந்து நிலையத்தில் இருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம் பிச்சைநகர் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை மராமத்து செய்யும் பணி நாளை (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

Must Read :மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

இதையொட்டி தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

14ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று வழக்கம்போல் குடிநீர் வினியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Drinking water, Local News, Trichy