திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி- நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை காலை 9.45 மணிமுதல் மாலை 2.00 மணிவரை பணி நடைபெற உள்ளது.
கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர் , ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும், அய்யளம்மன் படித்துறை கலெக்டர்வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ்நகர், பாரி நகர், பழைய எல்லைக்குடி ,காவேரிநகர் ,கணேஷ்நகர், சந்தோஷ்நகர், ஆலத்தூர், கே.கே கோட்டை மற்றும் பிராட்டியூர்கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதுhர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர், மற்றும் பிராட்டியூர் காவேரிநகர் ஆகிய பகுதிகளிலும் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 15.06.22 முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
செய்தியாளர் -
என்.
மணிகண்டன்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.