திருச்சியில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியின் ஒரு பகுதியாக நாய்கள் கண்காட்சி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியை கடந்த 26 நாள்களில் பெரியவா்கள், குழந்தைகள் என மொத்தம் 23 ஆயிரத்து 652 போ் கண்டுகளித்துள்ளனா். பிப். 27ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2 நாட்கள் முன்பு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் இணைந்து நாய்கள் கண்காட்சி நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியை ஆட்சியா் தொடங்கி வைத்தார்.இக் கண்காட்சியில், உள்நாட்டின் வளா்ப்பு நாய்களில் ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்டவையும் அயல்நாட்டினங்களான லாப்ரடாா், கிரேட் டேன், ஜொ்மன் ஷெப்பா்ட், டாபா்மேன், பொமரேனியன் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்பட்டு, கால்நடை மருத்துவ குழுவினரால் ஆய்வு செய்து, காட்சிப்படுத்தப்பட்டது.மேலும் இனத்தூய்மை, கீழ்படியும் திறன், பராமரிப்பு போன்ற பண்புகளின் அடிப்படையில், நடுவா்களால் தோ்வு செய்யப்பட்டது. சிறந்த வளா்ப்பு நாய்க்கு முதல் பரிசும், மற்றும் ஒரு ஆறுதல் பரிசும் இனவாரியாக வழங்கப்பட்டது. கண்காட்சியின் ஒட்டு மொத்த தோ்வுக்கு ஒரு சிறப்பு பரிசும் உண்டு.
நிகழ்ச்சியின் இறுதியில் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பிரிவின் சிறப்பு சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு செல்ல பிராணிகள் வளா்ப்பு, விலங்குகள் நலன், விலங்குகள் வதை தடுப்பு மற்றும் விலங்குகள் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதலும் இந்நிகழ்ச்சியின் நோக்கங்களாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் உரிமையாளா்கள் பாலக்கரையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவசமாக பதிவு செய்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Local News, Trichy