ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் வரும் 27ம் தேதி மின் தடை - உங்க ஏரியா இருக்கானு பாருங்க..! 

திருச்சி மாவட்டத்தில் வரும் 27ம் தேதி மின் தடை - உங்க ஏரியா இருக்கானு பாருங்க..! 

திருச்சி

திருச்சி

Power Shut Down on 27th In Trichy District | திருச்சி மாவட்டம் மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 27ம் தேதி (செவ்வாய் கிழமை)  மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் வரும் 27ம் தேதி (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் வரும் 27ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; சிவனுக்கு சமமாக அமைந்த பிரம்மன் - திருச்சி பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க உள்ளது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மன்னார்புரம் கிழக்கு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வரும் 27ம் தேதி மின் தடை ஏற்படுகிறது என்று தகவலை மன்னார்புரம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை செய்யப்படும் இடங்கள்:

மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.ஹெச். காலனி, உஸ்மான் அலிதெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணன் நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர், காஜா நகர், ஜே.கே. நகர், ஆர்.வி.எஸ். நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை, தர்கா ரோடு, அன்பு நகர், அருணாச்சலம் நகர், காந்தி நகர், டி.எஸ்.பி. கேம்ப, எஸ்டேட் பேங்க் காலனி, சிம்கோ காலனி, கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி, பி அண்ட் டி காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy