Home /trichy /

திருச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

திருச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

திருச்சியில் நாளை மின் தடை

திருச்சியில் நாளை மின் தடை

Trichy: திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9. 45 மணி முதல் மதியம் 3 மணி வரைமின் தடை இருக்கும் என அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருப்பதால் இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது. மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சி வேங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா 26ம் தேதி துவக்கம்

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆகையால், காலை 9. 45 மணி முதல் மதியம் 3 மணி வரை திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை ஏற்படும் பகுதிகள்: டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசு காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சப்பூ மற்றும் சுற்றுட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arunkumar A
First published:

Tags: Local News, Tamilnadu, Trichy

அடுத்த செய்தி