முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன்

Tiruchirappalli | திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில்  உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

அப்போது பக்தர்கள் கோயில் உண்டியலில்  செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.99,31,723 ரொக்கமும், 1 கிலோ 772 கிராம் தங்கம், 3,873 கிராம் வெள்ளியும், 230 அயல்நாட்டு நோட்டுகளும் , 344 அயல்நாட்டு நாணயங்கள் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர்: சே.கோவிந்தராஜ், திருச்சி

First published:

Tags: Trichy