தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன்படி ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு திட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு, பஞ்சப்பூர் ஏரி, திருவெறும்பூர், வண்ணத்துப்பூச்சி பூங்கா, கிளியூர், கூத்தைப்பார், துறையூர் நீர் நிலைகள் என 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் அறிவுறுத்தலின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என வனத்துறையினருடன் சேர்ந்து 100 பேர் 4 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் இரண்டாம் கட்டமாக மார்ச் மாதம் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற இருக்கிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் குறித்த விவரங்களும், அரிய வகை பறவைகள், அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை கண்டறிந்து பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில் மட்டும் 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டிருப்பதாக வன பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல, துறையூரில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி, ஆழத்துறையன்பட்டி ஏரி, சிக்கத்தம்பூர் ஏரி மற்றும் கீரம்பூர் ஏரி ஆகிய பகுதிகளில் பறவைகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரிய ஏரியில் 84 வகையான பறவைகளும், ஆழத்துடையான்பட்டியில் 44 வகையான பறவைகளும், சிக்கதம்பூர் ஏரியில் 38 வகையான பறவைகளும், கீரம்பூர் ஏரியில் 30 வகையான பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!
மேலும் இந்தப் பகுதியில் வெளிநாட்டு பறவைகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட பறவைகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Birds, Local News, Trichy