முகப்பு /திருச்சி /

திருச்சி சோமநாதர் கோயிலுக்கு இத்தனை சிறப்புகளா? அசந்து போன மக்கள்!

திருச்சி சோமநாதர் கோயிலுக்கு இத்தனை சிறப்புகளா? அசந்து போன மக்கள்!

X
திருச்சி

திருச்சி சோமநாதர் கோயில்

Trichy somanathar temple | திருச்சியில் உள்ள சோமநாதர் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே புளியஞ்சோலை செல்லும் வழியில் ஆலத்துடையான்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சோமநாதர் திருக்கோவில். ராஜ ராஜ சோழன் குழந்தை வரம் வேண்டி, முனிவர் ஒருவருடைய அறிவுரையைக் கேட்டு கொல்லிமலைக்கு வடதிசையில் இக்கோயிலை எழுப்பியதாகவும், இக்கோயிலில் கி. பி 962 ல் குடமுழுக்கு செய்யப்பட்டதாகவும் அங்குள்ள கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கோயில் கட்டப்பட்ட பிறகே, இவர் மகன் இராஜேந்திர சோழன் பிறந்ததாக சொல்லப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்இராஜராஜ சோழன்பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவர் காலத்தில்பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும்பெருவுடையார் கோயில்மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே இக்கோயில்3ஏக்கர்

பரப்பளவில்கட்டப்பட்டிருக்கிறது.

கோயில் சுரங்கம் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கருவறைக்கு வடதிசையில் சுரங்க பாதை உள்ளது. அது சுமார் 2கி.மீ நீண்டு செல்லக்கூடிய வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.களஞ்சியம் என்று அழைக்கப்படும் அந்த இடம், பராமரிப்பு இன்றி இன்றும் இருக்கிறது. அந்த காலத்தில் பொன், பொருள் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கோயில் சிற்பங்கள் பற்றி பார்த்தால்சோமநாதர் கருவறைக்கு மேல் உள்ள கோபுரத்தில் முழுவதும் ஆண் சித்தர்களின் சிலைகள் மட்டுமே இருப்பதையும்,செளந்தரவள்ளி அம்மனின் கருவறைக்கு மேல் உள்ள கோபுரத்தில் முழுவதும் பெண் சித்தர்களின் சிலைகள் மட்டுமே இருப்பதையும் காணலாம்.

கோயிலின் இருபுறங்களிலும் கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலுக்கு சொந்தமானநிலம் 110ஏக்கரில் 107 ஏக்கர் ஆலத்துடையான்பட்டி ஊர் பொது மக்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சரியான விளைச்சல் இருந்தும் கோயிலுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையும் தானியமும் கொடுக்கப்படாததால் , கோயிலை சரியாக பராமரிக்க முடியவில்லை என்றும் கோயிலின் மேற்பரப்பில் மரங்கள் வளர்ந்து, கோயில் இடியும் நிலையில் உள்ளதால் அதை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Temple, Trichy