திருச்சி மணப்பாறை அருகே இன்றும் நடக்கும் நாட்டார் வழிபாடு பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
நம்மோடு வாழ்ந்து மறைந்த மனிதர்களை நாட்டார் தெய்வங்கள் என்றும், நாட்டுப்புற தெய்வங்கள் என்றும் கூறுவார்கள். அவர்கள் இறந்த பின் நடுகல் நட்டு பீடங்கள் எழுப்பி வழிபடப்படுபவை. இந்த தெய்வங்கள் பொதுவாக ஆகம விதிகளுக்கோ, மத வழிப்பாட்டுக்கோ, சாஸ்திரங்களுக்கோ உட்படாதவை. ஒவ்வொரு தெய்வத்துக்கு ஒரு தோற்ற கதை உண்டு. அக்கதையை அடிப்படையாக கொண்டு தனித்தனி வழிபாட்டு முறையும், படையலிடும் பழக்கமும் உண்டு. இவ்வாறாக தனுஜா என்ற 3 வயது பெண் குழந்தையை தனுஜா அம்மனாக மாற்றி திருச்சியில் வழிபாடு செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகே வெள்ளையம்மாபட்டியை சேர்ந்த பழனிசாமி - லட்சுமி இணையரின் முதல் குழந்தை தனுஜா கடந்த 2007 விபத்தில் உயிரிழந்தார். பிறகு தனுஜாவுக்கு ஈமச்சடங்கு செய்ய ஸ்ரீரங்கம் சென்றதாகவும் அப்போது அங்குள்ள பூசாரிக்கு அருள் வந்து தனுஜா தனக்கு 3 வருடங்களுக்கு பின்பு கோயில் கட்டச்சொன்னதாகவும் இதனையடுத்து உறவினர்கள் 2011ல் கோயில் கட்டி வழிபடுவதாகவும் தனுஜாவின் பெற்றோர் கூறினர்.
மேலும் கோயிலில் ஒருசிலை வைத்து தினந்தோறும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும், சித்திரை மாதங்களில் பால்குடம் எடுத்து தீ மிதித்து, ஆடு வெட்டியும் திருவிழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். இதில் ஊர்மக்களும் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர். நாட்டார் தெய்வங்களில் பெண் தெய்வங்கள் ஏராளம். அதில் துர்க்கை அம்மன், மலட்டு அம்மன், அரியனாச்சி அம்மன், முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் என நீண்டு கொண்டே போகும் தெய்வங்கள் வரிசையில் தனுஜா அம்மனும் தெய்வமாகஇருக்கிறாள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோயில் கட்டி வழிபாடு செய்ய தொடங்கியதில் இருந்து தனுஜா தங்களோடு இருப்பதாகவும், தங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பதாகவும் மேலும் தங்கள் ஊரின் காவல் தெய்வமாக இருப்பதாவும் தனுஜாவின் தாயார் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy