ஹோம் /திருச்சி /

மணப்பாறை வட்டார விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் விநியோகம்..!

மணப்பாறை வட்டார விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் விநியோகம்..!

பனை விதைகள்

பனை விதைகள்

Trichy | தோட்டக்கலை துறை சார்பில்,  100 சதவீதம் மானிய விலையில், பனை விதைகள் விநியோகிக்கப்பட்ட உள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தோட்டக்கலை துறை சார்பில் 100 சதவீதம் மானிய விலையில் பனை விதைகள் விநியோகிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தோட்டக்கலை துறையின் மூலம் மணப்பாறை வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானிய விலையில் பனை விதைகள் விநியோகிக்கப்பட இருக்கிறது. தோட்டக்கலை துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்க்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்க்காகவும் 100 சதவீதம் மானிய விலையில் பனை விதைகள் விநியோகிக்கப்படஉள்ளது.

இதையும் படிங்க : புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - பயணத்தை ஒரு வாரம் தள்ளி வச்சிருங்க..

மேலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் மட்டும் வழங்கப்படும். பனை சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பனை விதைகள் விவசாயிகள் பயன் பெறும் வகையில், அழிந்து வரும் மரமாக பனை தற்போது இருப்பதாலும், அதை மீட்டெடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையில், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுகம் ஈடுபட்டுள்ளனர். மேலும், பனை மரத்தை காத்தால் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Agriculture, Local News, Trichy