ஹோம் /திருச்சி /

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்க வைக்கும் பொது கழிவறைகள்..! துர்நாற்றத்தால் பயணிகள் அவதி..!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்க வைக்கும் பொது கழிவறைகள்..! துர்நாற்றத்தால் பயணிகள் அவதி..!

திருச்சி

திருச்சி மத்திய பேருந்து நிலையம்

Trichy Central Bus Stand | திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூர், கரூர், மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பிரதான பகுதியாக அமைந்துள்ளது. இத்தனை ஆயிரம் பேர் வந்து செல்லும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. திருச்சி மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்படும் இந்த கழிப்பறைகள் இரவு நேரங்களில் மது அருந்துவோர் அப்பகுதியை ஆக்கிரமித்து கழிப்பறைகளில் மது அருந்தி செல்வதும் அங்கேயே பாட்டிலை போட்டு விட்டு செல்வதுமாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க : திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு தரைக்கடைகள் அமைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.! - கலெக்டர் அறிவிப்பு..!

இது மட்டுமல்லாமல் நாப்கின்கள், குப்பைகள், துணிகள் உள்ளிட்ட பல பொருள்கள் மத்திய பேருந்து நிலைய கழிப்பறையில் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கழிப்பறைக்கு செல்ல தயக்கமாக இருப்பதாகவும் பயணிகள் பலரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி மாநகராட்சியினர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தற்போது காய்ச்சல் பரவி வரும் வேளையில் கழிப்பறைகளை சுத்தமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் கழிப்பறைக்கு தனியாக ஆட்களை நியமித்து அதற்கென தூய்மையாக சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy