ஹோம் /திருச்சி /

திருச்சியில் வாழ்ந்துள்ள கற்கால மனிதர்கள்... தடயங்கள் கண்டெடுப்பு...

திருச்சியில் வாழ்ந்துள்ள கற்கால மனிதர்கள்... தடயங்கள் கண்டெடுப்பு...

திருச்சி

திருச்சி

Trichy District News : திருச்சி துறையூர் அருகே கற்கால வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தடையங்கள் கண்டுபிடிப்பு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி துறையூர் அடுத்து பகலவாடி மலைத்தொடரில் உப்பிலிய புரத்தை சேர்ந்த தனியார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

அவர்கள் மலை சார்ந்த இடங்கள் பள்ளத்தாக்குகள் ஆற்றங்கரைகளிலும் மரங்கள் காடுகள் நிறைந்த பகுதிகளும் தமது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.

கல் கருவிகளான , தீட்டி வழவழப்பாக்கி கைக்கோடாரி , உளி போன்றவற்றை உருவாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் சக்கரம் கொண்டு மண்பாண்டம் செய்ய தொடங்கியுள்ளதாக ஆய்வில் மேலும் தெரிகிறது. பின்பு கால்நடைகளையும் அவர்கள் உழவுக்கும் மற்ற விவசாயத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர் வளர்ப்பு மாடுகளை உளவிற்கு பயன்படுத்தினர்.

இதையும் படிங்க : திருச்சியில் சிறார் ஆபாச வீடியோ பரப்பியவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை...

தானியங்களை பெரிய பானைகளில் சேமித்து வைக்கும் பழக்கங்களைதொடங்கியுள்ளனர். தேவையான உணவுப் பொருட்களை விளைவிக்கவும் ஆரம்பித்துள்ளனர். மேலும் வாழ்விடங்களை மண் மற்றும் கல் பயன்படுத்தி கட்டியுள்ளனர், மேற்கூரை சோளத்தட்டை வைக்கோல் கொண்டு அமைத்திருந்ததாகஆய்வில் தெரிகிறது..

அதேபோல் இப்பகுதி மலையை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதியாக இருப்பதினால் இங்கு மேற்கூரை கொண்டு மேற்பரப்பாய் சிறிய அளவிலான சிவப்பு மண் பானைகளும், வழவழப்பான கைக்கோடாரி ஒன்றும் மூன்று சென்டிமீட்டர் அளவில் உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழரின் நாகரிகம் மிகவும் தொன்மையானது எனவும் உலக நாகரிக வளர்ச்சிக்கு தமிழர்கள் தான் முன்னோடிகள் என்பது தெரிய வருகிறது.

First published:

Tags: Local News, Trichy