ஹோம் /திருச்சி /

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு.. திருச்சியில் பட்டாசு விற்பனை மந்தம்.. வியாபாரிகள் வேதனை..

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு.. திருச்சியில் பட்டாசு விற்பனை மந்தம்.. வியாபாரிகள் வேதனை..

திருச்சியில்

திருச்சியில் பட்டாசு விற்பனை மந்தம்..

Trichy Deepavali Updates | தீபாவளி திருநாள் வர ஓரிரு நாட்களே உள்ள நிலையில் திருச்சியில் பட்டாசு விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை  களைகட்டி வரும் வேளையில் ஆங்காங்கே பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலக்கரை தென்னூர் சத்திர பேருந்து நிலையம் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகப்படியான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்ததால் பொதுமக்கள் பட்டாசு வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.

பட்டாசு கடை வியாபாரி:

திருச்சி பாலக்கரை அருகே அம்மன் பட்டாசு கடை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள் . வியாபாரிடம் கேட்டபோது.... இந்த ஆண்டு குறிப்பாக சிறுவர்களுக்கு அதிகப்படியான பட்டாசு ரகங்கள் வந்துள்ளது .

மேலும் பெரியவர்களுக்கான பட்டாசு ரகங்களும் விற்பனை செய்து வருகிறோம் ஆனால் பொதுமக்கள் நேரக் கட்டுப்பாடு விகிதத்தால் பட்டாசு வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள் மேலும் தீபாவளி ஒரு சில நாட்களே இருக்க நாங்கள் எதிர்பார்த்த வியாபாரம் நடக்கவில்லை மேலும் தொடர் மழையால் மக்கள் யாரும் பட்டாசு வாங்க வருவதில்லை என வியாபாரி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy