ஹோம் /திருச்சி /

Trichy News : 3டி தியேட்டர், மினி கோளரங்கம்.. திருச்சியில் உள்ள இந்த பூங்காவுல இத்தனை வசதிகளா?

Trichy News : 3டி தியேட்டர், மினி கோளரங்கம்.. திருச்சியில் உள்ள இந்த பூங்காவுல இத்தனை வசதிகளா?

X
திருச்சி

திருச்சி பூங்கா

Trichy Srirangam |  திருச்சி ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் கரையில் உள்ள பஞ்சக்கரை சாலையில் அறிவியல்,  பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் தாக்கத்தை விளக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய  பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

குறிப்பாக மாணவர்களுக்கு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் கோட்பாடுகள் எளிமையாக புரியும் வகையில் அதன் மாதிரிகள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கற்றல் எளிமையாகிறது. அறிவியல் குறித்த பயம் நீங்கி விருப்ப பாடமாகிறது.

சர் சி.வி. ராமன் பெயரில் ஒரு வளைவு. கணிதம் மற்றும் பொறியியலின் அடிப்படைகளை ஈடுபாட்டுடன் குழந்தைகளுக்கு அறிவியலை எளிதாக்க அறிவியல் கருவிகள் மற்றும் 100 இருக்கைகள் கொண்ட 3டி திரையரங்கம், ஒரு மினி கோளரங்கம் மற்றும் அறிவியல் அரங்கம் போன்றவையோடு குழந்தைகளை கவர பூங்காவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஓவியங்களுடன், பூங்காவில் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது., கழிவறைகள், குடிநீர் வசதி ஆகியவையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் தங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் விசாலமான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பூங்கா மாணவர்களுக்கு அறிவியலைொஎளிதாக விளக்கும் நல்ல ஆசானாக விளங்கும் என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை.

First published:

Tags: Local News, Trichy