முகப்பு /திருச்சி /

திருச்சியில் பெய்த தொடர் மழையால் அழுகிய பருத்தி செடிகள்- இழப்பீடு கோரும் விவசாயிகள்

திருச்சியில் பெய்த தொடர் மழையால் அழுகிய பருத்தி செடிகள்- இழப்பீடு கோரும் விவசாயிகள்

சேதமடைந்த நிலம்

சேதமடைந்த நிலம்

Trichy | திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தொடர் மழையால் பருத்திச் செடிகள் முழுவதும் அழுகியது. இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Lalgudi, India

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து ரெட்டி மாங்குடி கிராமத்தில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் பருத்திச் செடிகள் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் மாண்டோஸ் புயல் காரணமாக லால்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி தோட்டத்தில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பருத்தி விதைக்கும் போது, உழவு, பூச்சியை தடுக்க மருந்து தெளிப்பு என பல வகைகள் செலவு செய்துள்ளோம். இந்த வகையில் ஏக்கருக்கு சுமார் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்த நிலையில் அறுவடை நேரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் செடியிலேயே பருத்தி முளைத்து வருகிறது. மேலும் செடிகள் அழுகிவிட்டது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளை கணக்கீடு செய்து அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Trichy