Home /trichy /

புதுப்பொலிவு பெற்ற திருச்சி மேலப்புதூர் சுரங்க பாலம்.. நகரை அழகுபடுத்தும் பணியில் மாநராட்சி..

புதுப்பொலிவு பெற்ற திருச்சி மேலப்புதூர் சுரங்க பாலம்.. நகரை அழகுபடுத்தும் பணியில் மாநராட்சி..

திருச்சி

திருச்சி

Tiruchirappalli Melapudur Bridge : திருச்சி மாநகர் பகுதியில் முக்கிய இடங்களில் வண்ணமயமாக்கும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ள நிலையில் மேலப்புதூர் பாலம் மூவர்ண கொடியில் ஜொலிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி நகரை அழகாக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது திருச்சி மாநகராட்சி. அதன் ஒரு பகுதியாக மேலப்புதூர் சுரங்க பாலம் கண்கவர் இடமாக மாறியுள்ளது .
திருச்சி மாநகருக்குள் உள்ள அனைத்து பிரதான பாலங்களிலும் இது மட்டுமே சுரங்க பாலமாக உள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி ரயில்வே நிலையத்தினை இணைக்கும் பாலமாக இது உள்ளது. 1978ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 46 வருடங்கள் கடந்தாலும் இன்றும் பாலத்தின் சுவர்கள் பாதிப்பில்லாமல் அப்படியே உள்ளது அக்கால கட்டிட தொழில்நுட்பத்தின் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது இப்பாலம்.

மேலப்புதூர் சுரங்க பாலம்


சில வருடங்களாக இப்பாலத்தின் சுவரில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த பாலம் இந்திய நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வகையில் மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு மூவர்ணங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

மேலப்புதூர் சுரங்க பாலம்


திருச்சியில் மிகவும் பழமையான பாலம் திருச்சி மேலப்புதூர் மேம்பாலம் ஆகும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மேம்பாலத்தை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தை கடந்து செல்பவர்கள், புதிதாக வரையப்பட்டுள்ள மூவர்ண கொடியை பார்த்து புத்துணர்வுடன் கடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி