ஹோம் /திருச்சி /

தீவிரமடையும் கொரோனா.. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர பரிசோதனை..

தீவிரமடையும் கொரோனா.. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர பரிசோதனை..

X
திருச்சி

திருச்சி விமான நிலையம்

Trichy Airport Corona Test : வெளிநாடுகளில் தீவிரமாகும் கொரோனாவால் திருச்சி விமானத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் தீவிரமாக பரவிவரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமான நிலையங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பதாகவே தமிழக அரசு பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனை செய்ய தொடங்கிவிட்டனர்.

சீனா, ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களை ரேண்டம் முறையில் இரண்டு சதவீதம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடைபெற்ற வருகிறது. தற்போது 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் 22,969 வந்துள்ளனர். அதில் 533 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் உடல் வெப்ப அளவை கண்காணிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பில் உதயநிதி.. அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்

தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அதேபோல் திருச்சி விமான நிலையம் வரும் சர்வதேச பயணிகளையும் தீவிர சோதனைக்கு பின்னரே மாநிலத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: Corona, Local News, Trichy