ஹோம் /திருச்சி /

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் 3000 போலீசார் பாதுகாப்பு - திருச்சி காவல் ஆணையர் தகவல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் 3000 போலீசார் பாதுகாப்பு - திருச்சி காவல் ஆணையர் தகவல்

X
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் 3000 போலீசார் பாதுகாப்பு

Trichy District News : வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு புறக்காவல் நிலையத்தை காவல் துறை ஆணையர் திறந்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் உள்பிரகாரத்தில் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்து, சிசிடிவி செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

இதையும் படிங்க : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா... நிகழ்ச்சி நிரல் விவரம்

இதனைத்தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், “வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசியின்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். திருக்கோவில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உட்பட 92 கேமராக்கள் கூடுதலாக நிறுவப்பட்டு மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.

கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசாரின் உதவியுடன் கூட்டஎரிசலை கண்காணித்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா இருந்ததால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முழு மக்கள் தொகை அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது” என்று கூறினார்.

First published:

Tags: Local News, Trichy