ஹோம் /திருச்சி /

திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்க விழா..

திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்க விழா..

X
திருச்சி

திருச்சி

Trichy News : மாணவர்கள் நலனுக்காக திருச்சி தேசிய கல்லூரியில் வானவியல் தொடக்க விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி தேசிய கல்லூரியில் வானியல் குழு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த குழு மாணவர்களை வானவியல் துறையில் உயர் கல்வி தொடருவதற்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிவகங்கை வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சி ஆலோசகர் முனைவர் ரத்தினம் சந்திரமோகன் இவ்விழாவை தொடங்கி வைத்தார்.

அவர் உரையின்போது தமிழ் சங்க இலக்கியத்தில் உள்ள வானியல் சேர்ந்த குறிப்புகளை மேற்கோள் காட்டினார். 'இந்தியன் சயின்ஸ் மானிட்டர்' அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர், பேராசிரியர் T.K.V.ராஜன். 'வானியல் கணக்கீட்டின் அடிப்படையில் பண்டைய இந்திய இலக்கியத்தின் காலவரிசை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதையும் படிங்க : திருச்சியில் குரங்குகளால் அலறும் கிராமம்.... நடவடிக்கை எடுக்குமா வனத்துறை...?

மேலும் அவர் தேசியக் கல்லூரியின் இயற்பியல் துறைக்கு Sky watcher- India எனும் தொலைநோக்கியை வழங்கினார்.இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: Local News, Trichy