ஹோம் /திருச்சி /

திருச்சியில் 15 அடி பள்ளத்தில் இறங்கிய கல்லூரி பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்

திருச்சியில் 15 அடி பள்ளத்தில் இறங்கிய கல்லூரி பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்

விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து.

விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து.

Trichy News : திருச்சியில் சாலையில் குறுக்கே வந்த சைக்கிளில் மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தை ஓட்டுநர் திருப்பும்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 மாணவ மாணவியர் உள்ளிட்ட, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த விபத்தில் பெண் பேராசிரியர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கல்லூரி பேருந்து புதுக்கோட்டையை நோக்கி  சென்ற போது, சைக்கிளில் சென்ற இருவர் சைகை ஏதும் காட்டாமல் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளனர். அவர்களது உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் கண்ணதாசன், பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்தி, சாலை ஓரமாக திருப்பி உள்ளார்.

Also Read: குடும்பத் தகராறால் விபரீதம்... துபாயிலிருந்து ஊர் திரும்பியவர் தாய், மகனுடன் தூக்கிட்டு தற்கொலை! 

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,சாலையின் அருகே இருந்த மழை நீர் வடிகால் பாலத்தின் கீழ் உள்ள 15 அடி ஆழ பள்ளத்திற்குள் இறங்கியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி, முகப்பு விளக்கு உள்ளிட்டவை உடைந்து சேதம் அடைந்தன.

இந்த விபத்து குறித்து திருச்சி நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

First published:

Tags: Local News, Tamil News, Trichy