108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அரங்கநாத சுவாமி திருக்கோயில் உலக புகழ்பெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்த முதல்ல ராஜகோபுரத்துக்கு முன்னாடி இருக்கிற இந்த பெயரில்லாத கடையில் நின்னு ஒரு கப் காஃபி சாப்பிட்டு தான் போறாங்க.
என்னடா இது இந்த காஃபி கடையை பத்தி ஆஹா ஓஹோ னு பேசுறாங்களே என்னென்ன போய் பார்த்து தெரிஞ்சுக்கலாம்னு வண்டி எடுத்துட்டு ஸ்ரீரங்கத்தை நோக்கி பயணம் பண்ண செய்தோம்.
ராஜகோபரத்துக்கு முன்னாடி ரைட் சைடுல கூட்டமா இருந்துச்சு. அதுதான் பெயரில்லன்னாலும் மக்களால செல்லமா அழைக்கப்படும் “முரளி காஃபி கடை”.
வண்டியை பார்க் பண்ணிட்டு போய் டேஸ்ட் பாக்கலாம்னு போனோம். டேஸ்ட் சூப்பரா இருஞ்சு. இந்த கடை காஃபி எப்படி இவ்வளவு சுவையாக இருக்கு என்று தெரிந்துகொள்ள உரிமையாளர் முரளியிடம் கேட்டபோது, “சித்தப்பாவோட கடையிலேயே காலையில, நான் காஃபி கடையை தொடங்கினேன். ஆரம்ப காலத்தில் காஃபி குடிக்க யாருமே பெருசா வரல.
கொஞ்ச நாள் கடைக்கு லீவு விட்டிருந்தேன். பிறகு நேரிடையா நானே போயி, பாலைக் கறந்து எடுத்துட்டு வந்து, நைட்லாம் டிகாசன் போடாம உடனுக்குடன் டிகாசன் போட்டு காபி கொடுக்க ஆரம்பிச்சேன்.
நான் எதுக்குடா பால் கறக்கனும்னு நீங்க யோசிக்கலாம். பாலை, மத்தவங்கக் கறந்தா கண்டிப்பா தண்ணி ஊத்திடுவாங்க. நான் கறந்தா அது எதுவும் நடக்காதுல்ல. அப்படி நான் உருவாக்கிய கடைதான் இந்த ’முரளி காபி கடை .
அரசியல்வாதிகள், திரைப்பட நடிகைர்கள் எனப் பல பிரபலங்கள் திருச்சி வந்தா நம்ம கடை காஃபிதான் அவங்களுக்கு கொடுப்பாங்க. மூப்பனார் தொடங்கி இன்று இருக்கும் அரசியல்வாதிகள் வரை நம்ம கடையின் காஃபியை ருசிக்காமல் இருந்தது இல்லை.
மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!
கலைஞர், வைகோ, விஜயகாந்த், கவிஞர் வாலி, எனப் பலரும் நம்ம கடை காபியை குடித்துள்ளனர்.” என்று பெருமிதத்துடன் தன் கடை பெருமையை சொல்லி முடித்தார் முரளி.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coffee, Local News, Trichy