ஹோம் /திருச்சி /

சாலை ஓரங்களில் விற்பனையாகும் தேங்காய் பூ.. இதுல இவ்ளோ நன்மைகளா?

சாலை ஓரங்களில் விற்பனையாகும் தேங்காய் பூ.. இதுல இவ்ளோ நன்மைகளா?

திருச்சி

திருச்சி - தேங்காய் பூ

Trichy Latest News | திருச்சியில் பல இடங்களில் விற்பனையாகும் மருத்துவ குணம் கொண்ட தேங்காய் பூ வியாபாரம். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும் என்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியில் பல்வேறு சாலையோரங்களில் விற்பனையாகும் தேங்காய் பூ வியாபாரம் .திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சாலையோரங்களில் தேங்காய் பூ வியாபாரம் அதிகமாக காணப்படுகிறது அதிலும் குறிப்பாக பொதுமக்கள் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

தேங்காய் பூவின் நன்மைகள்:

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேக்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் உள்ளது.தேக்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.

ட்trichy

மேலும் படிக்க:  திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைக்கும். ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சாப்பிடலாம். அதிலுள்ள தண்ணீர் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது .மற்றும் மலச்சிக்கலை குணமாக்கும்.தேக்காய் பூ இன்சிலுன் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

இதயத்தில் படியும் கொழுப்பை தேக்காய் பூ கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க தேங்காய் பூ உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கும் என்கின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy