ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும்.
மேலும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் குழந்தை ஏசு, ஆட்டு மந்தை, தேவதூதர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் இடம் பெறும். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கட்டி தொங்கவிடுவார்கள்.
குறிப்பாக ஏசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது என்பதால், அதை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திரங்களை தொங்க விட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.
திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், திருச்சி மாவட்ட மக்கள் பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
இதையும் படிங்க : திருச்சி ஸ்ரீரங்கநாதர் தனது தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு கொடுத்த சீர்வரிசை என்ன தெரியுமா?
அதன்படி கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவைகளை அமைத்து வருகின்றனர். இதற்காக திருச்சி அல்லி மால் கடைத்தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல கவர்ச்சியான வண்ணங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, Christmas eve, Christmas tree, Local News, Tamil News, Trichy