Home /trichy /

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க கோரும் விவசாயிகள்..

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க கோரும் விவசாயிகள்..

காவிரி,

காவிரி, கொள்ளிடம்

Trichy Cauvery River | திருச்சியில் வரலாற்று சின்னமாக அணைகள் இருந்தாலும் விவசாயிகள் இன்றளவும் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். இதற்கு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய உபரி நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, அந்த அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைக்கு வரக்கூடிய உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு, வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நேற்று  காலை முக்கொம்பு மேலணைக்கு வினாடி ஒன்றுக்கு 45,210 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 21,271 கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 23,064 கன அடி நீரும், இதில் அய்யன் வாய்க்காலில் 300 கன அடி நீரும், பெருவளை வாய்க்காலில் 225 கன அடி நீரும், புள்ளம்பாடி வாய்க்காலில் 350 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

நேற்று மதிய நேரத்தில் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது. இந்த ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் முக்கொம்பு மேலணை மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விடப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீர்  நுரையுமாக, அதிக இரைச்சலுடன் வெளியேறுகிறது.

புதிய தடுப்பணைகள் தேவை

மழை இல்லாத காலங்களில் விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்து போகும் சூழ்நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது.
ஆனால் மாறாக இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததால் காவிரியில்  அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பல ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கையாக இருப்பது தடுப்பணை அமைப்பதாகும். காவிரி ஆற்றின் நடுவிலும், கொள்ளிடம் ஆற்று நடுவிலும் தடுப்பணைகள் அமைத்தால் ஆங்காங்கே நீரை தேங்கி வைக்க முடியும் நிலத்தில் நீரை பாதுகாக்க முடியும். குறிப்பாக விவசாயிகள் விவசாய நிலங்களை குறித்த நேரத்தில் பயிரிட்டு பயன்பெற முடியும். இதை அரசு உடனடியாக தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக காவிரி - குண்டாறு திட்டத்தை இணைத்து அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும். மேலும் இது போன்ற வெள்ள அபாய காலங்களில் நீரினை ஆற்றிலும் குளங்கள் ஏரிகள் போன்றவற்றில் சேமித்து வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தற்போது வெள்ளப் பெருக்கால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது, அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை விவசாய சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் அய்யாக்கண்ணு கேட்டுக்கொண்டார்.
Published by:Arun
First published:

Tags: Cauvery River, Local News, Trichy

அடுத்த செய்தி