ஹோம் /திருச்சி /

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி..

திருச்சி

திருச்சி

Tiruchirapalli | திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பட்டவத்து ரோடு மற்றும் வானப்பட்டறை சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகரம் தமிழகத்தின் மைய பகுதியாக அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் வைப்பதற்கு ஆங்காங்கே சாலைகள் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பட்டவத்து ரோடு மற்றும் வானப்பட்டறை சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சாலையானது என் எஸ் பி ரோட்டிற்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இந்த ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது .

மேலும் இந்த பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ளதால் மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

மாநகராட்சி பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் பணி முடிந்த உடனே சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy