108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீராமர் பிறந்த புனர்பூச நட்சத்திரத்தில் இந்த தேரோட்டம் வருடம் தோறும் தை மாதத்தில் நடைபெறுவது மிகவும் விஷேசமானது. அதன்படி தினசரி பெருமாள் பல்வேறு வாகனங்களில்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் இன்று தொடங்கியது. இதற்காக அதிகாலை பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரில் எழுந்தருளிய பெருமாளை திரளான பக்தர்கள், “ரங்கா, ரங்கா, கோவிந்தா” என கோஷமிட்டவாரு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy