ஹோம் /திருச்சி /

தண்டவாள பராமரிப்பு பணிகள்... திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள்... திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

Trichy District | தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி - குமாரபுரம் - கடம்பூர் ரயிவே தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் வண்டி எண். 22627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (புதன்கிழமை), மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண். 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20691 தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்ரயில் திருச்சி மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்படாது. இதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20692 நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும், நாளையும் நாகர்கோவில் மற்றும் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.05 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்படாது.

இதேபோல், மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16106 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், இன்றும், நாளையும் திருச்செந்தூர் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திருச்சியில் இருந்து 11 மற்றும் 12ஆம் தேதிகளில் அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ரயில் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி மற்றும் நெல்லை வழியாக மாற்று வழியில் இயக்கப்படும்.

Must Read : வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

மறுமார்க்கமாக குருவாயூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மணியாச்சி, கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ரயில் நிலையங்களை தவிர்த்து நெல்லை, தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Train, Trichy