கடைகளில் பாடபுத்தகங்கள், நோட்டு, பேனாக்களும் படுஜோராக விற்பனையாகின்றன. ஆனால் பள்ளிக்கூடங்களில், கற்பித்தல் பணிக்கு பயன்படும் சாக்பீசுகளின் வியாபாரம் மட்டும் ‘டல்’ அடிக்கிறது. காரணம், டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள். சாக்பீஸ் தொழிலின் இன்றைய நிலையை பற்றி தெரிந்து கொள்ள சாக்பீஸ் உற்பத்தியாளர்களை தேடி சென்றோம். பலரும் சாக்பீஸ் தொழிலை ஓரங்கட்டிவிட்ட நிலையில், ஸ்ரீரங்கம் அருகே காயத்ரி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் 15 வருடமாக இந்த சாக்பீஸ் தொழிலை செய்து வருகிறார்.
சிறிய அளவிலான தொழில்கூடத்தை அமைத்து, பணியாட்களின் ஒத்துழைப்போடு, சாக்பீஸ் தயாரித்து வருகிறார். இவரிடம் சாக்பீஸ் உற்பத்தி பற்றியும், சமீபகால வியாபார வீழ்ச்சி பற்றியும் பேசினோம். பல வண்ணங்களில் சாக்பீஸ் தயாராவதை போல, பலவிதமான தகவல்களை பதிலாக தந்தார்.
கடந்த காலத்தில் சாக்பீஸ் தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது தற்போது நிலையில் யாரும் வாங்க கூட வருவதில்லை எல்லாம் டிஜிட்டல் முறையில் வந்து விட்டதால் பிழைப்பு நடத்துவதே கடினமாக இருக்கிறது. ஏதோ தெரிந்த தொழிலை வைத்து அன்றாட வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது முன்பு போல் இல்லை இந்த சாக்பீஸ் தொழில். கடந்த காலத்தில் எனது தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தார்கள் தற்பொழுது 4 பேர் மட்டுமே நாங்கள் வேலை செய்து வருகிறோம் காரணம் ஆர்டர் சரிவர வருவதில்லை அதனால் கூலி ஆட்களுக்கு எங்களால் சம்பளம் கூட தர முடியவில்லை என கூறுகிறார்.
*வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான பந்தம் கொண்டது சாக்பீஸ்.*
நான் இப்போ சொல்ல வருவது உங்களுக்கும் நடந்திருக்கலாம்! ஆம் நாம் வகுப்பறையில் பாடங்களை கவனிக்காமல் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் நிலையில் ஆசிரியர் தூக்கி எரிவார் சாக்பீஸை இங்கு பாடத்தை கவனி என்று. ஆசிரியர் இல்லாத வேளையில் மாணவர்களே ஆசிரியராக மாறி சக மாணவர்களுக்கு சாக்பீசில் பாடம் நடத்தி ஆனந்தம் அடைவார்கள். அத்தகைய அனுபவத்தை இன்றைய மாணவர்கள் பெரும்பாலானோர் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளும், ஸ்மார்ட் வகுப்புகளும் சாக்பீஸ் உடனான பந்தத்தை கரைத்துக்கொண்டிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy