முகப்பு /திருச்சி /

டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்த நெல்.. ஈரப்பதத்தை ஆய்வு செய்த மத்திய ஆய்வு குழு!

டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்த நெல்.. ஈரப்பதத்தை ஆய்வு செய்த மத்திய ஆய்வு குழு!

X
ஆய்வு

ஆய்வு குழு.

Trichy | கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் நனைந்து வீணானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த மற்றும்அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழையில் நனைந்திருந்த நிலையில் அவற்றின் ஈரப்பத அளவை கணக்கீடும் மத்திய அரசின் குழு திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகையில் தொடங்கிய இந்த ஆய்வு மூன்றாவது நாளாக திருச்சியில் தொடர்ந்துநடைபெற்றது. இந்த ஆய்வில் மத்திய தொழில்நுட்ப குழு பிரபாகரன் தலைமையில் யூனுஸ், போயா ஆகியோர் நெல் ஈரப்பத அளவை பெரிய சூரியூரில் முதலில் ஆய்வு செய்தனர். அடுத்ததாக குண்டூர், மணப்பாறை பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.

திருச்சியில் மத்திய தொழில்நுட்பக் குழு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லை எடுத்து சோதனை செய்து அதில் உள்ள ஈரப்பதளவை குறித்துக் கொண்டு அதற்கான மாதிரிகளை எடுத்து சிறு மூட்டைகளாக கட்டி எடுத்து சென்றனர்.

First published:

Tags: Agriculture, Local News, Trichy