ஹோம் /திருச்சி /

திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி..

திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி..

திருச்சி

திருச்சி கோ ஆப்டெக்ஸ்

Trichy Co-optex | திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோ ஆப் டெக்ஸ் தீபாவளியை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் காலத்திற்கேற்ற வகையில் புதிய யுக்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்துவருகிறது.

புதிய வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், சுடிதார் ரகங்கள் குர்தீஸ்கள், போர்வைகள், கைலிகள் மற்றும் ரெடிமேட் சர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 30 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோ ஆப் டெக்ஸ் தீபாவளியை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:  5 ரூபாய்க்கு 5 விதமான உணவுகள்.. திருச்சியில் ஒரு அட்டகாச உணவகம்..!!

மேலும் கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் மாதாந்திர சந்தா ரூபாய் 300 முதல் 20000 வரை செலுத்தலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு11, 12வது மாத சந்தா தொகையை கோ.ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை வழங்கி வருகிறது.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy