திருச்சியில் வரும் திங்கள் கிழமை (நவம்பர் 14) தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிது. இதில் 8ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற பெறாத இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை சாா்பில், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநா்களை நியமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் சோ்க்கை முகாமில் இதுவரை தொழில் பழகுநா் பயிற்சி (அப்ரண் டிஸ்) பெறாதவா்கள் மற்றும் 2018-19, 2019-20,
2020-21, 2021-22ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியாா் ஐ.டி.ஐ. பயிற்சியாளா்கள் பங்கேற்கலாம்.
மேலும் 8ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10,12 ம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (ஆண்,பெண்) பங்கேற்கலாம். மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமாா் 200-க்கும் மேற்பட்டதொழில் பழகுநா்கள் இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!
இப்பயிற்சியின்போது உதவித்தொத்கையாக மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற் பழகுநா் சட்டத்தின்படி இந்த நிறுவனங்களில் சோ்ந்து ஓராண்டு பயிற்சி பெறுவோருக்கு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், விவரங்களுக்கு திருவெறும்பூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job vacancies, Local News, Trichy