முகப்பு /திருச்சி /

கட்டண சேனல்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!

கட்டண சேனல்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!

X
திருச்சி

திருச்சி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

Trichy News : தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

கேபிள் டிவி கட்டண சேனல்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பொழுதுபோக்கு சேனல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்கவரி கிட்ஸ் போன்ற சிறுவர்கள் பார்க்க கூடிய கட்டண சேனல்களின் விலையை உயர்த்தி கொள்ளலாம் என சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் சேனல் முதலாளிகள் தங்களுடைய சேனல் கட்டணங்களை பன்மடங்காக உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மாதம் முதல் கேபிள் டிவி மாத கட்டணம் 500 ரூபாய் வரை உயரக்கூடும். விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க : தங்கைக்கு கிளிபிடித்து கொடுத்த அண்ணன் - கோலாகலமாக நடந்த பொன்னர் - சங்கர் திருவிழா..!

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் விஷ்ணுவர்தன் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் 200 க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பங்கேற்று கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Trichy