Home /trichy /

காவிரியில் குறைந்தது வெள்ளம் - திருச்சி திருவானைக்காவல் வழியாக பேருந்து இயக்கம்

காவிரியில் குறைந்தது வெள்ளம் - திருச்சி திருவானைக்காவல் வழியாக பேருந்து இயக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காவிரியில் வெள்ள பொங்கி வந்த பெருக்கு குறைந்தததைத் தொடர்ந்து திருவானைக்காவல் வழியாக கல்லணைக்கு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்ததாலும், தென்மேற்கு பருவ மழை காரணமாகவும் திருச்சி காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருவனைக்காவல் கோவில் கல்லணை சாலையின் உத்தமர்சீலிக்கும் கவுத்தரசநல்லூருக்கும் இடையே கல்லணை காவிரி ஆற்றில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால், ஆங்கிலேயரால் பள்ளமாக வடிவமைத்து கட்டப்பட்ட சாலைக்கு மேலே, கொள்ளிடத்திற்கு தண்ணீர் வழிந்து ஓடியது. இதனால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவனைக்காவல் கோவில் வழியாக கல்லணைக்கு செல்லும் பேருந்துகள் உத்தமர்சீலியோடு திரும்பி அனுப்பப்பட்டது. அத்துடன், பேருந்து எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

    இதனால், பொதுமக்களும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப்படியாககுறையத் தொடங்கியது.

    இதனால், அந்த சாலையில் கல்லணைக்கு மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி