முகப்பு /திருச்சி /

திருச்சி அருகே புண்டரீகாஷப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

திருச்சி அருகே புண்டரீகாஷப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

X
தேர்

தேர் திருவிழா.

Trichy News | திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் பிரம்மோத்ஸவ விழாவில்  திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறையில் அமைந்துள்ளது புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் உபகோயிலான இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 6 வது திவ்ய தேசமாக விளங்கும் இத்தலம் ஸ்வதேகிரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் பிரமோத்ஸவ விழாவானது மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கண்ணாடி அறையிலிருந்து பெருமாள் தாயார் புறப் பாடாகி திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து திருத்தேரானது நிலைக்கு வந்தடைந்தது. இந்நிகழ்வில் ஜீயபுரம் டி.எஸ்.பி பாரதிதாசன் மேற்பார்வையில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் காவலர்கள் , ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி தலைவர் லதா கதிர்வேலு மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

First published:

Tags: Car Festival, Local News, Trichy