Home /trichy /

திருச்சியில் 11 ஆண்டுகளாக திறக்கப்படாத சிவாஜி சிலை.. சிலை திறக்கப்படாததன் மர்மம் என்ன?

திருச்சியில் 11 ஆண்டுகளாக திறக்கப்படாத சிவாஜி சிலை.. சிலை திறக்கப்படாததன் மர்மம் என்ன?

திருச்சி

திருச்சி சிவாஜி சிலை

Trichy District: சிவாஜி வெண்கல சிலை நிறுவப்பட்டு 11 ஆண்டு ஆகியும் திறக்கப்படவில்லை - சிலையைத் திறந்தால் ஆட்சி போய்விடுமா ?

    திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டு 11 ஆண்டு ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.  சிலையைத் திறந்தால் ஆட்சி போய்விடுமா? உண்மை நிலவரம் என்ன?

    திருச்சி மாநகர் பகுதியில் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. 1928ஆம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    முதலில் அவர் திருச்சியில் உள்ள நாடகக்குழுவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைத்துறையிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக அவர் நடித்த பராசக்தி, கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களின் மூலம் அவரது நடிப்பும் வசனங்களும் பல ரசிகர்களை கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும்.

    பிறகு காலப்போக்கில் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் சிவாஜி நடிக்கத் தொடங்கினார். இவர் செவாலியே உள்ளிட்ட சர்வதேச, தேசிய, மாநில அளவிலான பல விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி காலமானார்.

    இவரது மறைவுக்குப் பின்னர் திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது. சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சிலை துணியைக் கொண்டு மூடப்பட்டது.தற்போது வரை மூடிய சிலை மூடியவாறு இருக்கிறது.

    சிவாஜியின் மூத்த ரசிகர்.

    இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை தீவிர ரசிகராக உள்ள சிவாஜி சின்ன தம்பி கூறுகையில் , “சிவாஜி சிலை பதினோரு ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது எனவும் இதற்காக எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி உள்ளோம் ஆனாலும் இதற்கு இன்றளவும் விடை தெரியவில்லை.

    குறிப்பாக சட்டசபை மாநகராட்சி கூட்டம் இதுபோன்ற இடங்களில் சிவாஜி சிலையை திறக்க அனைவரும் பேசி வருகிறார்கள் ஆனாலும் எந்த ஒரு பயனும் இல்லை.
    சிலையைத் திறந்தால் ஆட்சி போய்விடும் என்று போலி பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் என்னவோ சிலையை இன்னும் திறக்காமல் வைத்திருக்கிறார்கள்.விரைவில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர் - என்.மணிகண்டன்.
    Published by:Arun
    First published:

    Tags: Actor Sivaji ganesan, Trichy

    அடுத்த செய்தி