திருச்சியில் கணவனை இழந்த பெண்ணை அடைய, அப்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அவரின் காதலனுக்கு அனுப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரம் பொன்மலை அருகே திருநகர் பகுதியில் வசிப்பவர் ஜெயராம் பாண்டியன்(வயது 38). கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்த இவர், அரியமங்கலம் மண்டலத் துணைத் தலைவராக பதவி வகித்தார். சொந்தமாக, ஆழ்துளை கிணறுகள் (போர்வெல்) அமைக்கும் தொழிலும் நடத்தி வந்தார். பாஜகவில் இணைந்த பிறகு, திருச்சியை சேர்ந்த பாஜக மகளிரணி நிர்வாகி ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார்.
அவர் தனது மகள், கணவனை இழந்த நிலையில் சென்னையில் வசித்து வருவதாக கூறி இருக்கிறார். தற்போது சென்னையில் முகாமிட்டு போர்வெல் பணிகளை செய்யும் ஜெயராம் பாண்டியன், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையும் படிக்க : வறண்ட பாறைகளில் இருந்து வடியும் நீர்.. திருச்சியில் ஒரு அதிசய சிற்றோடை!
அப்போது அந்த பெண், உதவி இயக்குனர் ஒருவருடன் 'லிவ்விங் டூ கெதர்' முறையில் வாழ்ந்து வருவது தெரிய வந்திருக்கிறது. அந்த பெண்ணை அடையும் நோக்கில், இருவரையும் பிரிக்க ஜெயராம் பாண்டியன் திட்டம் தீட்டியுள்ளார்.
அந்தப் பெண்ணை போட்டோ எடுத்தது மட்டுமல்லாது, அந்த போட்டோவை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) உள்ளார். அந்த போட்டோவை அப்பெண்ணுடன் வாழ்ந்து வந்த உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும், சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்கள்.
போலீசார் வழக்குப் பதிவுச் செய்து தலைமறைவான ஜெயராம் பாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஜெயராம் பாண்டியன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து சென்னையிலிருந்து விரைந்த தனிப்படையினர் நேற்று அதிகாலை திருச்சியில் பதுங்கி இருந்த ஜெயராம் பாண்டியனை கைது செய்தனர். திருச்சி பாஜக பிரமுகர் சென்னை போலீசரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.