முகப்பு /திருச்சி /

பிரியாணி பிரியர்களே திருச்சி வந்தால் இந்த கடையை மிஸ் பண்ணாதீங்க..!

பிரியாணி பிரியர்களே திருச்சி வந்தால் இந்த கடையை மிஸ் பண்ணாதீங்க..!

X
திருச்சி

திருச்சி

Trichy District News : திருச்சியில் 40 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் சந்து கடை பிரியாணி.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

சந்துக்கடை பிரியாணி பற்றி திருச்சியில் யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கடந்த 40 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய உணவகம். குறைந்த விலையில் தரமான சுவையில் பிரியாணி இந்த கடையில் தான் கிடைக்கும் என்று பிரியாணி பிரியர்களால் பாராட்டப்படும் ஒரு உணவகம். அப்படி என்ன இந்த கடையின் சிறப்பு என அறிந்து கொள்ள நேரடியாக கடைக்கு ஒரு விசிட் அடித்தோம்.

திருச்சி மாநகருக்கு அழகு சேர்க்கும் மலைக்கோட்டையில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது இந்தப் பிரியாணி கடை. கடைக்குள் பிரியாணி சாப்பிட காத்திருந்தபோது, வட்டாவை தட்டி பிரியாணி அள்ளும்போது பட்டை, கிராம்பு, பிரியாணியின் மசாலா, வாசம் மனதை கொள்ளை கொள்கிறது.

இங்கு மட்டன் கோலாவும், தலக்கறியும் ரொம்ப பிரபலம். கடை சிறியதாக இருந்தாலும் கூட்டம் பெரிய அளவில் வருகிறது. கடையை பராமரித்து வரும் முகமது யூசப்பிடம் பேசும்போது, "மக்கள் தொடர்ந்து நம்ம கடைக்கு வராங்கன்னா, அதுக்கு முக்கிய காரணம் பிரியாணியின் சுவை தான்.

இதையும் படிங்க : திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா அட்டவணை - முன்னேற்பாடுகள் தீவிரம்

நம்ம கடை பிரியாணி சாப்பிட்டால் எந்த ஒரு நெஞ்செரிச்சல், ஏப்பம், தொடர்ந்து தண்ணீர் தாகம் இதெல்லாம் இருக்காது. காரமும் ரொம்பவே கம்மியா தான் இருக்கும். உடம்புக்கு இதனால எந்த பிரச்சனையும் வராது. நம்ம கடை பிரியாணியை ஒரு முறை சுவைத்தவர்கள் எங்களுடைய ரெகுலர் கஸ்டமர்ஸ்ஸா மாறிவிடுவாங்க. அதனாலதான் நம்ம கடைக்கு அதிகமா கூட்டம் வருது.

அதுமட்டுமில்ல எங்க கடையில இருந்து தான் திருச்சியில் உள்ள பல பிரபலமான அரசியல்வாதிகள் பலருக்கும் பிரியாணி அடிக்கடி பார்சல் போகுது. அதேபோல நடிகர் விஜய் சேதுபதி திருச்சி வரும்போதெல்லாம் எங்க கடையில தான் வந்து பிரியாணி சாப்பிடுவார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சாப்பிட்டு முடிச்சதும் நல்லாருக்குன்னு சொல்லிட்டு எங்களோட உட்கார்ந்து பேசிட்டுப் போவாறு. கொடுக்குற காசுக்கு நல்ல சாப்பாடு கொடுக்குறாங்கன்னு வாழ்த்துறது வர சந்தோஷம் வேற எதுலயும் இல்ல பா ” என்று கூறி கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை கவனிக்க சென்று விட்டார்.

First published:

Tags: Local News, Trichy