ஹோம் /திருச்சி /

திருச்சிக்கு வரும் புவனேஷ்வர் - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்றம்... அதிகாரிகள் தகவல்...

திருச்சிக்கு வரும் புவனேஷ்வர் - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்றம்... அதிகாரிகள் தகவல்...

ரயில் நேரம் மாற்றம்

ரயில் நேரம் மாற்றம்

Trichy | திருச்சிக்கு வரும் புவனேஷ்வர்-ராமேஸ்வரம் ரயில் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிக்கு வரும் புவனேஷ்வர் - ராமேஸ்வரம் ரயில் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 20896 ) புவனேஷ்வர் - ராமேசுவரம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இந்நிலையில், இந்த ரயில் ஆனது வரும் 4ம் தேதி முதல் ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு வந்து 4.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதையும் படிங்க : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அன்னதானம் திட்டத்தின் மூலம் 90 லட்சம் பக்தர்கள் பயன்!

வண்டி எண் 06251 மைசூரு-மயிலாடுதுறை இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் வருகிற 4, 11, 18 ஆகிய தேதிகளான வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாளான சனிக்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்து சேரும்.

இந்த தகவலை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Train, Trichy