திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழை ரகங்கள் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து கருத்தரங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்டார். மேலும் வாழை வகைகள் மற்றும் வாழையிலிருந்து செய்யப்பட்ட மதிப்பு கூட்டு பொருட்களான வாழை ஜாம் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இதுகுறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சுரேஷ்குமார் கூறும்போது, ”இந்தியாவில் ஏறக்குறைய 30 மில்லியன் மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி ஆகிறது.வாழைப்பழம் உற்பத்தியில் உலகளவில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
எந்த ஒரு நாடும் உற்பத்தி செய்யாத அளவிற்கு இந்தியா வாழைப்பழ உற்பத்தியில்சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பழங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்காக வாழைப்பழம் உள்ளது.
இதையும் படிங்க : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா... நிகழ்ச்சி நிரல் விவரம்
தமிழ்நாடு-14.2 சதவிகிதம் , குஜராத் - 13.8 சதவிகிதம், ஆந்திர பிரதேசம் - 13.4 சதவிகிதம் என மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் மொத்த வாழைப்பழம் உற்பத்தியில் 40 சதவீதத்தைப் பிடித்துள்ளன.
மேலே கூறிய மூன்று மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்தும் சேர்த்து 58.6 சதவீதம் வரை வாழைப்பழம் உற்பத்தியை அளிக்கின்றன.
நாடு முழுவதும் 10 மாநிலங்களில் வாழைப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 5136 மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழைப்பழம் மட்டுமல்லாது இலை, பூ, காய், தண்டு, நார் என வாழையின் அனைத்து பொருட்களும் உபயோகப்படுகிறது. கதலி, கற்பூரவல்லி, பூவன், பேயன் என பலவகை வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒடிஷாவில் 521.31 மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் 837.21 மெட்ரிக் டன் பழங்களும், மேற்கு வங்கத்தில் 1077.8 மெட்ரிக் டன் பழங்களும் உற்பத்தியாகின்றன.
மத்திய பிரதேசத்தில் 1701 மெட்ரிக் டன் வாழையும், பீகாரில் 1702 மெட்ரிக் டன் வாழைப்பழமும் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் 2529.6 டன் பழங்கள் உற்பத்தியாகின்றன.
தமிழகத்தில் வாழைப்பழங்கள் தென் மாவட்டங்களில் அதிகம் விளைகின்றன. வாழை உற்பத்தியில் நம்பர் ஒன் இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள மண் வளமும், சீதோஷ்ண நிலையில் வாழை உற்பத்தியில் முதன்மையாக திகழ முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 20 வகையான வாழை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த கூட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த பிரச்சனைகள் மற்றும் அரசிடமிருந்து எதிர் பார்க்கப்படும் சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கண்காட்சியை பார்த்து பயனடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy