ஹோம் /திருச்சி /

திருச்சியில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும் - சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் கோரிக்கை

திருச்சியில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும் - சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் கோரிக்கை

மாநகர பேருந்து

மாநகர பேருந்து

Trichy | விபத்துகளை தவிர்க்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை அமைக்க கோரிக்கை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு, குடிமக்கள் நலச்சங்க தலைவர் மற்றும் சாலைபாதுகாப்பு கலந்தாய்வு குழு உறுப்பினருமான கோவிந்தராஜ் சில கோரிக்கைகளை வைத்தார்.

அனைத்து பேருந்துகளிலும் ‌ காலை மற்றும் மாலை வேளையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் படியில் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

விபத்துகளை தடுக்கும் வகையில் தானியங்கி முறையில் திறந்து மூடக்கூடிய முறை கதவுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், வளைவு மற்றும் விபத்து பகுதிக்கு உறுதி செய்யப்பட்ட இடங்களில் தேவையான சிக்னல் லைட் மற்றும் இன்டிகேஷன்ஸ் போர்ட் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : காவேரி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்... விவசாயிகள் கோரிக்கை...

மேலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பக்கவாட்டு கண்ணாடி இன்றி பயணம் செய்யும்பொழுது பின்வரும் வாகனங்களை கவனிக்காமல் சாலையினை கடப்பதினால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பக்கவாட்டு கண்ணாடி இன்றி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோரை காவல்துறையினர் கண்டிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி to புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ள மாத்தூர் ரவுண்டானா பகுதியை சீர்படுத்தி உயர் கோபுர மின் விளக்கு அமைக்கவும், பிலிங்கர் லைட் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy