திருச்சியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள கல்லூரி நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள 15.04 ஏக்கர் அரசு நீர் நிலைகள் மற்றும் அரசு நிலங்களை திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள ஜெ.ஜெ கல்லூரி ஆக்கிரமித்துள்ளது என்றும் இதற்கான ஆதாரங்களை கொண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் சார்பில் மாவட்ட பதிவாளரிடம் 11.01.23 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் 2010 ஆம் ஆண்டு கல்லூரி கட்ட கடன் வாங்கும் பொழுது இந்த அரசு நில பத்திரப்பதிவு ஆவணங்களை வங்கியில் சமர்பித்து ரூ.45 கோடி கடனையும் கல்லூரி பெற்றுள்ளது. எனவே இன்றைய தேதியில் அரசு நிலமாக வருவாய் ஆவணங்களில் உள்ள இந்த நிலங்களை பத்திர பதிவு செய்தது மோசடியானது என்று அறிவித்து, பத்திரபதிவு சட்ட பிரிவு 77 படி அவற்றை ரத்து செய்து அவற்றை செய்த அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மீது பிரிவு 81 இன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் கோரி உள்ளதாக கூறினார்.மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் இந்த நீர் நிலைகளை தூர்வாரி இவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arapor iyakkam, Local News, Trichy