Home /trichy /

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஓணம் பண்டிகை மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் - எர்ணாகுளம் வரையில் 15ம் தேதி முதல் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் (வண்டி எண்: 06012-06011) வாராந்திர சிறப்பு ரயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும். ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 17, 24, 31ம் தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7 -ந்தேதி ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    மறுமார்க்கமாக இந்த ரயில் வருகிற 18, 25ம் தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி மற்றும் 8ம் தேதி இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும். இந்த ரெயில் நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.

    மேலும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (வண்டி எண்: 06039-06040) வாராந்திர சிறப்பு ரயில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து வருகிற 15, 22, 29-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ம் தேதி மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    இதேபோல் தாம்பரம்-வேளாங்கண்ணி (வண்டி எண்: 06031) சிறப்பு ரயில் அடுத்த மாதம் 7ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதரிப்புலியூர்.

    சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி