ஹோம் /திருச்சி /

திருச்சியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் - உங்க பகுதி இருக்கான்னு பார்த்துக்கோங்க

திருச்சியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் - உங்க பகுதி இருக்கான்னு பார்த்துக்கோங்க

மின் தடை

மின் தடை

Trichy District News | மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

    திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 24) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து, காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் தெரித்துள்ளார்.

    மின் தடை ஏற்படும் இடங்கள்:

    துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி , நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி மற்றும் பழையபாளையம்.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local News, Power cut, Trichy